தூத்துக்குடி அருகே நெற்பயிர்களில் பூச்சி தாக்கத்தால் மகசூல் குறைந்தது விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி அருகே நெற்பயிர்களில் பூச்சி தாக்கத்தால் மகசூல் குறைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே நெற்பயிர்களில் பூச்சி தாக்கத்தால் மகசூல் குறைந்தது விவசாயிகள் வேதனை
Published on

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே நெற்பயிர்களில் பூச்சி தாக்கத்தால் மகசூல் குறைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நெற்பயிர்

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். போதுமான தண்ணீர் கிடைத்ததால் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. அதே நேரத்தில் பூச்சிகளின் தாக்கம் நெற்பயிரில் அதிகமாக காணப்பட்டது. இதனால் மபயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வந்தன. பயிர் பொதியாக வந்த போது, ஏற்பட்ட பூச்சிகளின் தாக்குதலால் நெல் விளைச்சல் பாதியாக குறைந்து உள்ளது.

பூச்சி தாக்குதல்

இது குறித்து அத்திமரப்பட்டி விவசாயி சந்திரன் கூறும் போது, ஒரு ஏக்கர் நிலத்துக்கு வரப்பு வெட்ட ரூ.1200, உழவு போடுவதற்கு ரூ.3 ஆயிரத்து 600, நடுவை செய்ய ரூ.3 ஆயிரத்து 600, மரம் அடிக்க ரூ.1200, களை எடுக்க ரூ.1500, மூன்று முறை பூச்சிக்கு மருந்து அடிக்க மற்றும் கூலி ரூ.2700, உரம் ரூ.2660, அறுவடை கூலி ரூ.2700, மூடை சுமை கூலி ரூ.1600 ஆக மொத்தம் ரூ.21 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தோம். இதில் நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில், பொதி வந்த போது பூச்சி தாக்கியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 60 மூடை வரை விளைந்த நிலங்களில் தற்போது 30 மூடை மட்டுமே விளைந்து உள்ளது.

விவசாயிகள் பாதிப்பு

ஒரு கோட்டை நெல் ரூ.1800க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சொந்த வயல் உள்ளவர் ஒரு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் செலவு செய்தால், ரூ.27 ஆயிரம் வருமானம் கிடைத்து உள்ளது. ஆனால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com