ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைபுதுச்சேரி விநாயகபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30), இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது பின்னால் வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரவீன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com