புதுடெல்லி
ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அவர் முறித்துக் கொண்டு தனது சொந்தக் கூட்டணியை அவர் முடிவு செய்ய வேண்டும் கட்டம் நெருங்கிவிட்டது என்று பஸ்வான் கூறினார்.
நான் நிதிஷ்சை எச்சரிக்கிறேன். அவர் விரைவாக முடிவெடுக்காவிட்டால் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்து தனக்கு விருப்பமான அரசை நிறுவிவிடுவார் என்று எச்சரித்தார் பஸ்வான்.
நிதிஷ் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி தனது முடிவை தள்ளிப்போடலாம். ஆனால் இச்சூழ்நிலையிலிருந்து தப்பிச் செல்ல முடியாது என்றும் பஸ்வான் கூறினார்.
நிதிஷ் தனது நலன், கட்சி நலன் மற்றும் மாநில நலன் கருதி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றார் பஸ்வான் தெரிவித்தார். பிகாரில் அரசு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் நிலைமை கை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்றார் பஸ்வான்.
மெகா கூட்டணி பிகாரில் சாத்தியமற்றுள்ளது. நிதிஷ் குமார் சுஸ்ஹாசன் பாபு (நல்லாட்சித் தருபவர்) என்று தன்னை முன்னிறுத்துபவர். ஆனால் லாலுவும் அவரது குடும்பமும் பல்வேறு ஊழல்களில் இடம் பெற்றவர்கள் என்று சுட்டிக்காட்டினார் பஸ்வான்.
இதனிடையே ஐக்கிய ஜனதா தளம் செய்தித்தொடர்பாளரான கே சி தியாகி நிதிஷ் ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாதவர் என்று கூறியுள்ளார். மேலும் கூட்டணியில் எழுந்துள்ள சிக்கலை தீர்க்க சோனியா, ராகுலுடன் சமரச பேச்சு நடத்த தான் ஒருபோதும் கோரவில்லை என்றார் தியாகி.
மெகா கூட்டணி பிளவுறாமல்தான் இருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜேவாலா நிருபர்களிடையே தெரிவித்தார். சோனியா சமரசம் செய்ததாக கூறிய விஷயத்திற்கு பதிலளித்த அவர் மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சித் தலைமையை கலந்தாலோசித்து பேசும்படி கேட்டுக்கொண்டார்.