சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

பாரத ஸ்டேட் வங்கியில் 44 கோடியே 51 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. மெட்ரோ நகரங்களில் ரூ.3 ஆயிரமும், இதர நகரங்களில் ரூ.2 ஆயிரமும், ஊரக பகுதிகளில் ஆயிரம் ரூபாயும் இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டி இருந்தது. அப்படி வைத்திருக்காவிட்டால், ரூ.5 முதல் ரூ.15 வரை (வரிகள் தனி) அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எல்லா சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்தது. எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் ரத்துசெய்துள்ளது. இது, வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

அதே சமயத்தில், சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதத்தை ஒரே மாதிரியாக 3 சதவீதமாக குறைத்துள்ளது. அதுபோல், பல்வேறு கால அளவிலான வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் 0.15 சதவீதம்வரை குறைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, இதர வங்கிகளும் இதே அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com