மருத்துவத்திற்கான நோபல் பரிசு : டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுட்டியன் இருவருக்கு பகிர்ந்தளிப்பு

இன்று திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
Published on

ஸ்டாக்ஹோம்,

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் கனவாக இருக்கிறது.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, இன்று திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

டாக்டர்கள் டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுட்டியன் இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

உடலை தொடாமலேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com