நூடுல்ஸ், பாஸ்தா மேக்கர்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக நூடுல்ஸ், பாஸ்தா ஆகியன மாறிவிட்டன.
Published on

உடனடி உணவாக தயாரிக்க கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் நூடுல்ஸ் நல்லதல்ல என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஹைட்ரஜன் காற்றடைக்கப்பட்ட எந்தப் பொருளுமே உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளை மகிழ்விக்க அவர்கள் விரும்பியதை வீட்டி லேயே சமைத்துத் தருவதற்கு வந்துள்ளதுதான் நூடுல்ஸ், பாஸ்தா மேக்கர். கென்ட் நிறுவனம் இதற்கான கருவி யைத் தயாரித்துள்ளது.

பாஸ்தா அல்லது நூடுல்ஸ் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை இதனுள் போடவேண்டும். இதன் மேல்பகுதி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் போல உள்ளது. மூடியை தனியே கழற்றி வைக்கும் வகையில் உள்ளது. மாவு, எண்ணெய் உள்ளிட்டவற்றை போட்டு ஆன் செய்தால், மாவைப் பிசைந்து உங்களுக்கு எந்த வடிவத்தில் பாஸ்தா, நூடுல்ஸ் தேவையோ அதற்கான அச்சை மாவு வெளி வரும் பகுதியில் பொருத்தினால் நூடுல்ஸ் அல்லது பாஸ்தா வரும். இதை வேகவைத்து அதனுடன் சுவையான பொருட்களை சேர்த்து சாப்பிடலாம். இது சுகாதாரமானது. வீட்டிலேயே தயாரிக்க முடிவதால் அஜினோ மோட்டோ அல்லது உணவுப் பொருள் கெடாமலிருக்க சேர்க்கப்படும் ரசாயன சேர்க்கைகள் இதில் இருக்காது. இதனால் வயிறு உபாதைகளும் ஏற்படாது.

மோமோஸ் (கொழுக்கட்டை), குஜ்ஜா உள்ளிட்ட உணவு வகைகளையும் தயாரிக்க முடியும். இதற்கு ஓராண்டு உத்தரவாதம் உண்டு. 150 வாட்ஸ் திறன் கொண்டது. இதனுடன் பாஸ்தா, நூடுல்ஸ் தயாரிப்பதற்கான உணவு கையேடும் தரப்படுகிறது. 6 விதமான டிஸ்க், அளவு கோப்பை, இதை சுத்தம் செய்வதற்கான பிரஷ் ஆகிய அனைத்தும் இந்த தயாரிப்புடன் வழங்கப்படுகிறது. இதைக் கையாள்வது எளிது. அதேபோல சுத்தம் செய்வதும் எளிது. ரூ. 12 ஆயிரம் விலையில் அறிமுகமான இந்த பாஸ்தா மேக்கர் இப்போது அமேசான் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ரூ.9,450-க்கு கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com