கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியும், அதனை கண்டித்தும் இந்து திராவிட மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

அந்த பொழுதுபோக்கு பூங்கா முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து திருக்கோவிலின் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபுஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொழுதுபோக்கு பூங்காவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பொழுதுபோக்கு பூங்கா ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com