

ராயகடா,
ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, ஒடிசாவின் ராயகடா மற்றும் தித்லகார் பகுதிகளுக்கு இடையே அம்போடலா ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. தண்டவாளத்தினை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து விபத்து நிவாரண ரெயில் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ராயகடா மற்றும் தித்லகார் வழித்தடத்தின் தைகாலு மற்றும் அம்பதோலா பிரிவில் கடும் வெள்ளம் ஏற்பட கூடிய சூழலில் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 5 ரெயில்கள் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டு உள்ளன.