ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.69 லட்சமாக உயர்வு

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.69 லட்சமாக உயர்ந்துள்ளது.
Published on

டெஹ்ரான்,

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,370 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,69,440 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 183 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,791 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஈரானில் 2,32,873 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 22,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com