ஓலைப்பாடி, நாவதாங்கள், ஆவூர் ஏரிகள் தூர்வாரும் பணி - மத்திய குழுவினர் ஆய்வு

ஓலைப்பாடி, நாவதாங்கள் மற்றும் ஆவூர் ஏரிகளில் தூர்வாரும் பணியை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Published on

வேட்டவலம்,

பசுமை வேட்டவலம் அமைப்பின் சார்பில் ஓலைப்பாடி ஏரி, நாவதாங்கள் ஏரி கடந்த சில நாட்களாக தூர் வாரப்பட்டு வருகிறது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை இயக்குனர் ரஷீத்குமார் சென், கலெக்டர் கந்தசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) மந்தா கினி மற்றும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் எந்த அளவில் முடிவு பெற்றுள்ளது என்பதையும், அவற்றின் பராமரிப்பு குறித்தும், இனி மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு குறித்தும், நீர்வரத்து கால்வாய்கள் குறித்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது பசுமை வேட்டவலம் அமைப்பின் தலைவர் செந்தில்குமரன், செயலாளர் வினோத், பொருளாளர் கருணாகரன், துணைத் தலைவர் ராஜி மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து பசுமை ஆவூர் அமைப்பின் சார்பில் ஆவூர் பெரிய ஏரியில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினர்.

அப்போது பசுமை ஆவூர் அமைப்பின் தலைவர் அபுதாஹிர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com