ஐ.நா.சபையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சுஷ்மா சுவராஜின் ஐ.நா. சபை பேச்சு ஒரு பிரசாரத்திற்கான பேச்சாக உள்ளது, யாரும் தேசிய கொடிக்கு பின்னார் மறைந்துக்கொள்ள முடியாது, ஐ.நா. சபையை அரசியலுக்கான தளமாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ் சபையில் பேசுகையில் பிரதமர் மோடியின் பெயரை 10 முறை குறுப்பிடுகிறார், ஆனால் இந்தியாவை 5 முறை மட்டுமே குறிப்பிடுகிறார்.
ஐ.நா. சபையை நீங்கள் அரசியலுக்கான தளமாக பார்த்தால், தேசியக் கொடியின் பின்னால் நீங்கள் மறைந்துக்கொள்ள முடியாது என டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜனதாவின் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சுஷ்மா சுவராஜின் ஐ.நா. சபை பேச்சின் முதல் பாதியில் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவிற்கான பார்வையை மட்டுமே முன்வைத்தார். தூய்மை பாரதம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்துதான் பேசுகிறார். இது ஐ.நா. பேச்சா அல்லது பா.ஜனதாவின் கோஷமா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். சசிதரூர் கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.