'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்

குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் 'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் இன்று , கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசும்போது, 'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசும்போது,

குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும் ஆன்லைன் கேம்களான ப்ளூ வேல், பப்ஜி மற்றும் ரம்மி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும்.

பப்ஜி என்று அழைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 20 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால், ஏற்கனவே இந்தியாவின் சில நகரங்களில் இது தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய ஆன்லைன் கேம்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பல பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் வருகின்றன. இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக 'ஆன்லைன் கேம்'களை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com