போட்டித்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டித்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
போட்டித்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

தூத்துக்குடி,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சிறப்பு வல்லுனர்களை கொண்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் பயிற்சி

இநத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஜூம் என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே பயிற்சி பெற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tam-i-l-n-a-du-c-a-r-e-e-rs-e-rv-i-ces.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அதில் காணொலி காட்சி மூலம் கற்றல், பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் மாதிரி வினாத்தாள் போன்றவை இடம்பெற்று உள்ளன. இதனையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com