முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு, முஸ்லிம் பெண்கள் கருப்பு தபால் அட்டை

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு, முஸ்லிம் பெண்கள் கருப்பு தபால் அட்டை சென்னையில் இருந்து அனுப்பினர்.
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு, முஸ்லிம் பெண்கள் கருப்பு தபால் அட்டை
Published on

சென்னை,

முத்தலாக்கை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பிரதமருக்கு கருப்பு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தபால் நிலையத்தில் கட்சி நிறுவனர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடினர். பின்னர் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட தபால் அட்டைகளை ஒன்று சேர்ந்து பிரதமருக்கு தபாலில் அனுப்பி வைத்தனர். அந்த தபால் அட்டையில், பல ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் பின்பற்றி வரும் ஷரியத் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ள பிரதமருக்கு கண்டனம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com