‘நமது அமைப்பின் தோல்வியையே காட்டுகிறது’ - நிர்பயாவின் தாய் கண்ணீர்

நமது அமைப்பின் தோல்வியையே காட்டுகிறது என்று நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.
Published on

xபுதுடெல்லி,

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தநிலையில், அவர்களது தண்டனையை டெல்லி கோர்ட்டு நேற்று ஒத்திவைத்தது. அடுத்த உத்தரவு வரும்வரை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

இந்த அறிவிப்பால் நிர்பயாவின் தாய் ஆஷாதேவி ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தூக்கிலிடுவதை ஒத்தி வைத்திருப்பது நமது அமைப்பின் தோல்வியையே காட்டுகிறது. இந்தியாவில் நீதி எப்படி தாமதமாகிறது? என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் நிமிர்ந்து நிற்கிறேன். அவர்கள் (குற்றவாளிகள்) தூக்கிலிடப்பட வேண்டும். நிர்பயா வழக்கை விட மோசமான ஒரு வழக்கு இருக்க முடியாது. ஆனாலும் நான் இன்னும் நீதிக்காக போராடி வருகிறேன். இந்த கோர்ட்டுகள் எல்லாம் அமர்ந்து கொண்டு இந்த நாடகத்தை வேடிக்கை பார்க்கின்றன என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com