யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!

குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.
Published on

சென்னை

யோகி பாபுவும், ஓவியாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு தகவல் பரவியது. அது உண்மையா, வதந்தியா? என்ற சந்தேகங்களும் பரவலாக பேசப்பட்டன. இப்போது அது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

யோகி பாபு - ஓவியா கூட்டணியில் தயாராகும் அந்த படத்துக்கு, காண்டிராக்டர் நேசமணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காண்டிராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம், வடிவேல் நடித்ததால் பிரபலமானது.

இந்த பெயரில் படம் தயாரிக்க நிறைய பேர் ஆசைப்பட்டனர். அந்த அதிர்ஷ்டம் டைரக்டர் ஸ்வாதீஷ் எம்.எஸ்.க்கு அடித்துள்ளது. யு.அன்பு கதை எழுதியிருக்கிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான யு.அன்பு கூறும்போது, இது குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது. சென்னை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com