காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
Published on

குப்வாரா,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனால் எல்லை பகுதியில் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டு உள்ளது. எனினும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று மதியம் தாக்குதலில் ஈடுபட்டது. அவர்கள் பீரங்கி குண்டுகளை வீசியும் மற்றும் பிற ஆயுதங்களையும் கொண்டு இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் சரியான பதிலடி கொடுத்தனர். எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்துள்ளனர் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com