காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 3 இந்தியர்கள் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்தியர்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் குல்பூர் பிரிவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய பகுதிகளை நோக்கி போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவு 9.20 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த மோதலில் இந்திய குடிமக்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதனை பூஞ்ச் துணை ஆணையாளர் ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் நாட்டின் குடிமக்கள் பலர் கொல்லப்படும் சூழல் காணப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com