பள்ளிபுதுப்பட்டு ஏரியில் ரூ.30 லட்சத்தில் குடிமராமத்து பணி சக்கரபாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிபுதுப்பட்டு ஏரியில் ரூ.30 லட்சத்தில் குடிமராமத்து பணியை சக்கரபாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிபுதுப்பட்டு ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் ஏரியை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார உதவி பொறியாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை இயக்குனருமான ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வானூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியை புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் பிரபாகரன், பள்ளிபுதுப்பட்டு ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் கருணாமூர்த்தி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சித்ரா, பொருளாளர் அன்பரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டா மண்டகப்பட்டு முருகன், அற்பிசம்பாளையம் குமரேசன், ஊராட்சி செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com