பரணி, மகா தீப தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை - இன்று வெளியிடப்படுகிறது

பரணி தீபம், மகா தீப தரிசன டிக்கெட்டுகள் இன்று (சனிக்கிழமை) ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
பரணி, மகா தீப தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை - இன்று வெளியிடப்படுகிறது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த பரணி மற்றும் மகா தீப தரிசனத்திற்கு ரூ.500 முகமதிப்பிட்ட கட்டண சீட்டுகள் 500 பேருக்கும் மற்றும் மகா தீபதரிசனத்திற்கு ரூ.600 முகமதிப்பிட்ட கட்டண சீட்டுக்கள் 100 பேருக்கும், ரூ.500 முக மதிப் பிட்ட கட்டண சீட்டுக்கள் 1,000 பேருக்கும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் இணையதளம் மூலமாக வெளியிடப்பட உள்ளது.

கட்டண சீட்டுக்களை www.arunachaleswarartemple.tnhrc.in என்ற இணைய தளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

கட்டணச் சீட்டு பதிவு செய்தவுடன், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் ( otp ) குறுச்செய்தி பதிவு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண்ணிற்கு வரும். கட்டண சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டண சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 10-ந் தேதியன்று அதிகாலை 2 மணி முதல் 3 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீப தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 10-ந் தேதியன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள்.

இந்த 2 தீபம் நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் அசல் கட்டண சீட்டு மற்றும் அசல் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு, கோவில் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படு வார்கள். குறிப்பிட்ட நேரத் திற்குள் வருகைதர தவறும் பக்தர்களை கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com