நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல் முறை போட்டியாளர்கள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டவர்கள் சிலர் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல் முறை போட்டியாளர்கள்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டவர்கள் சிலர் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர். இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் அடங்குவார்கள்.

தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல வட சென்னை தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தென் சென்னை தொகுதியில் கடந்த முறை எம்.பி.யாக இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனனை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை எதிர்த்து போட்டியிட்ட கவுதமசிகாமணி ஆகியோரும் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றியை ருசித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com