பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளி, மயங்கி விழுந்து சாவு

நெய்வேலி அருகே பா.ம.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Published on

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள காட்டுவேகாக்கொல்லையை சேர்ந்தவர் விஜயரங்கன்(வயது 43), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இந்திராநகரில் நடைபெற்ற பா.ம.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது திடீரென விஜயரங்கன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜயரங்கன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com