சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது

வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வருகை தந்து தலைமை செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதோடு, கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com