

இஸ்லாமாபாத் ,
முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினேம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்றில் பேசிய பர்வேஷ் முஷாரப் கூறியதாவது:
1979 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு நன்மை செய்வதற்காகவும், ரஷ்யாவை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் நாங்கள் மத போர்க்குணத்தை அறிமுகப்படுத்தினோம்.
நாங்கள் உலகம் முழுவதிலும் இருந்து முஜாகிதீன்களை அழைத்து வந்தோம், அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினோம். நாங்கள் தலிபான்களுக்கு பயிற்சி அளித்தோம்,
காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வந்தவர்களுக்கு ஆதரவு அளித்து பயிற்சி அளித்தேம். ஒசாமா பின்லேடன், ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியேர் எங்கள் ஹீரேக்கள். அய்மான் அல்-ஜவாஹிரி எங்கள் ஹீரோ. பின்னர் உலகளாவிய சூழல் மாறியது. உலகம் விஷயங்களை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கியது. எங்கள் ஹீரோக்கள் வில்லன்களாக மாற்றப்பட்டனர் என அவர் கூறினார்.
காஷ்மீரில் எந்தவிதமான தலையீடும் இல்லை என்று கூறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து வருவதாகவும், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளித்து வருவதாகவும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.