பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியது

பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Published on

பெரம்பலூர்:

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.85 இருந்த நிலையில், 28-ந்தேதி லிட்டருக்கு 18 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 3 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் லிட்டருக்கு 24 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 08 காசுக்கு விற்பனை ஆனது. 29-ந்தேதி பெட்ரோல்-டீசல் அதை விலைக்கு விற்றது.

இந்நிலையில் 30-ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 21 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 24 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 95 ரூபாய் 36 காசுக்கும் விற்பனையானது. 1-ந்தேதி லிட்டருக்கு 22 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 46 காசுக்கும், லிட்டருக்கு 29 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 65 காசுக்கும் விற்பனையானது. நேற்று முன்தினமும் லிட்டருக்கு 22 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 68 காசுக்கும், லிட்டருக்கு 28 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 93 காசுக்கும் விற்பனையானது. நேற்று லிட்டருக்கு 43 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 89 காசுக்கும், லிட்டருக்கு 29 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 96 ரூபாய் 22 காசுக்கும் விற்பனையானது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 103 ரூபாய் 40 காசுக்கு விற்பனையானது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் 91 காசுக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வால் வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com