கும்பகோணம் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு; தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை

கும்பகோணம் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Published on

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளர் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ராமலிங்கம், ஒரு கும்பலை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ராமலிங்கம் படுகொலை தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து ராமலிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் கடந்த மாதம்(ஏப்ரல்) 25-ந் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று திருபுவனம் வந்து தங்களுடைய முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் முகாமிட்டு ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம், சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். தேசிய புலனாய்வு அமைப் பினருக்காக திருவிடை மருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தனி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com