பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்ய, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2019 பிளஸ்-1 பொதுத் தேர்வெழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்ய, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்ய, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

கிருஷ்ணகிரி,

மார்ச் 2019 மேல்நிலை முதலாண்டு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Ap-p-l-i-c-at-i-on for Ret-ot-a-l-l-i-ng / Rev-a-lu-at-i-on என்ற தலைப்பினை கிளிக் செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

நாளைக்குள்...

இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 2 நகல்கள் எடுத்து நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ. 205-ம், மறு மதிப்பீட்டிற்கு ஒவ்வொரு பாடத்திற்கு ரூ.505-ம் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com