சென்னை,
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்நிலையில், இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பதிவில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.