சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டி?

நடிகர் கார்த்திக் போயஸ் கார்டனில சசிகலாவை சந்தித்து பேசினார்.
சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டி?
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலில் சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட உள்ளது. பா.ம.க. (டாக்டர் ராதாஸ்) அணியுடன் இணைந்து தேர்தலை சசிகலா சந்திக்கிறார். இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தினமும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்தநிலையில், நடிகர் கார்த்திக் போயஸ் கார்டனில சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. தேர்தலில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார். அவரது அணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்தார். அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட் சியை நடத்தி வந்தார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டி யிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com