யாருடன் கூட்டணி..? தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் ஆலோசனை

நிர்வாகக்குழு கூட்டத்தில் ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
யாருடன் கூட்டணி..? தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் ஆலோசனை
Published on

விழுப்புரம்,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

2026 தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? தனித்துப் போட்டியா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருபுறம் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததையடுத்து, ராமதாஸ் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், இந்த கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com