புதுச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்

அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரத்தால் புதுச்சேரி தேர்தல் களம் உச்சத்தை அடைந்துள்ளது.
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
Published on

புதுச்சேரி,

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவைகளும், இந்தியா கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. தேர்தலில் 4 முனைபோட்டி நிலவுகிறது. தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்காக இன்று புதுவைக்கு வருகிறார். தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரத்தால் புதுச்சேரி தேர்தல் களம் உச்சத்தை அடைந்துள்ளது. நாளை (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணியுடன் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com