திமுக தலைவரின் மக்கள் பணி என்றும் தொடரும் - அன்பில்மகேஷ்

அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி என அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரின் மக்கள் பணி என்றும் தொடரும் - அன்பில்மகேஷ்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அன்பில்மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை.

எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி. தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் திமுக தலைவரின் மக்கள் பணி என்றும் தொடரும்.”

இவ்வாறு அதில் அவர் தெஇவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com