கடந்த தேர்தலில் அதிமுக... இந்த முறை திமுக: அதே தொகுதிகளில் கட்சி மாறி போட்டியிடும் 3 வேட்பாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் ரவீந்திரநாத் உடன் திமுகவில் இணைந்தார்.
கடந்த தேர்தலில் அதிமுக... இந்த முறை திமுக: அதே தொகுதிகளில் கட்சி மாறி போட்டியிடும் 3 வேட்பாளர்கள்
Published on

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எவ்வளவோ முயன்றும் மீண்டும் கட்சியில் நுழைய வாய்ப்பு கிடைக்காமல் போனதால் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தனது மகன் ரவீந்திரநாத் உடன் திமுகவில் இணைந்தார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியிலும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடிநாயக்கனூர் தொகுதியும், வைத்திலிங்கத்துக்கு ஒரத்தநாடு தொகுதியும், மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்ட இவர்கள் 3 பேரும் இந்த தேர்தலில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஒரத்தநாடு தொகுதியில் எம்.சேகர், ஆலங்குளம் தொகுதியில் கே.ஆர்.பி. பிரபாகரன் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com