

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்தில் மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.