ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கமில்லை - வைகோ

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கமில்லை - வைகோ
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக நிச்சயமாக தனிப்பெரும்பான்மை பெறும். 2026 தேர்தலுக்குப்பிறகும் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார். திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் தொடரும். ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மதிமுக வைக்கவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை.

மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்திக்கொண்டு அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக திட்டங்கள் ஒதுக்கப்படும் என்று நினைத்தது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com