தமிழுக்கு துரோகம் செய்யும் கூட்டணியில் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியலில் முறியடிக்க முடியாத ரெக்கார்ட் அனைத்தும் திமுகதான் செஞ்சிருக்கு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழுக்கு துரோகம் செய்யும் கூட்டணியில் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியதாவது:-

மொழிப்போர் தியாகிகளை தந்த புதுக்கோட்டைக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டின் பண்பாட்டை சொல்லக்கூடிய ஊராக விளங்கும் புதுக்கோட்டை திமுகவின் கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திமுக அரசு செய்த நலத்திட்டங்கள் ஏராளம். வேட்பாளர்களின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்தி விட்டார்​கள்.

மாநில உரிமைகளுக்கு எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? தே.ஜ. கூட்டணி எனும் பேரிடரை தமிழ்நாட்டுக்கு பின்வாசல் வழியாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சி.நாம் முன்னேறாமல் முடங்கிவிடுவோம் என்பதே அவர்களின் திட்டம். அதற்கு ஆமாம் சாமி போடுகிறார் பழனிசாமி.

தமிழ்நாடு மீது அக்கறை இருந்தால் அமித்ஷா, மோடியை வைத்துக்கொண்டு இரு மொழிக்கொள்கை குறித்து பேச முடியுமா? சமஸ்கிருதம் மூல மொழி என சொன்னது தவறு என அமித்ஷாவை பார்த்து கூற முடியுமா?

குடியுரிமை திருத்த சட்டம், வக்ப் திருத்த சட்டத்தை ஆதரித்து ஆமாம் சாமி போட்டவர் பழனிசாமி. தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு பெற மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி கேட்க முடியுமா?

துரோகத்தில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவு செய்துவிட்டு வாய் கூசாமல் பொய் பேசுகிறார் பழனிசாமி. அவர் பழனிசாமி அல்ல, ஆமாம் சாமி, அடிமை சாமி, தமிழுக்கு துரோகம் செய்யும் கூட்டணியில் பழனிசாமி.

ஊழல்வாதிகள், தேர்ந்த துரோகிகள் காவிக்கும்பலை தோளில் சுமந்து வருகிறார்கள். பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் திட்டத்தை மத்திய அரசு காப்பி அடித்துள்ளது. இத்தனையும் செய்யும் ஸ்டாலின் கொரோனாவில் போயிருக்க வேண்டும் என பழனிசாமி வன்மமாக பேசுகிறார். மக்கள் பிரதமரை பார்த்து மோடி ஜி, வேர் இஸ் எல்.பி.ஜி என கேட்கின்றனர்.

இந்த ஸ்டாலின் இருந்து என் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்வேன். அதை பார்ப்பீர்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய உயரங்களுக்கான பயணங்களை தொடங்க போகிறோம்.பாஜக கிளைக்கழக செயலாளர் பழனிசாமி இப்படி போன்ற சாதனைகளை சொல்ல முடியுமா? பழனிசாமி சாக்கடைக்கு சமமான சொற்களை, அவதூறுகளை பேசி தரமற்றவர் என நிரூபிக்கிறார்.

நமது திட்டங்களைப் பார்த்துதான் ஒன்றிய அரசே காபி அடித்துக்கொண்டு இருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ஓஜி.

ரூ.8,000 கூப்பன் வெச்சி மகளிர் தங்களுக்கு தேவைப்படும் பொருளை வாங்கிக்கலாம். வீட்டுக்காரர் கிட்ட எல்லாம் கேக்காதீங்க. தாவது கேட்டு முறைச்சாங்கன்னா. அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லுங்க. உங்க இஷ்டம் உங்க சாய்ஸ்தான். கிரிக்கெட்ல சச்சின் கிட்டதான் எல்லா ரெக்கார்டும் இருக்கும். அரசியலில் அப்படி முறியடிக்க முடியாத ரெக்கார்ட் அனைத்தும் திமுகதான் செஞ்சிருக்கு.. இனியும் நாமதான் ரெக்கார்ட் பிரேக் பண்ணுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com