தர்மபுரியில் சவுமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் என்பவரை களமிறக்கிய ராமதாஸ்

பாமக (ராமதாஸ் தரப்பு) 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தர்மபுரியில் சவுமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் என்பவரை களமிறக்கிய ராமதாஸ்
Published on

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அனைத் திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.பு.ம.மு.க.) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். சசிகலா நேற்று முன்தினம் 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். சேலம் மேற்கு- இரா.அருள், வந்தவாசி- முரளி சங்கர், கும்பகோணம்-ம.க.ஸ்டாலின், விருத்தாசலம்-இ.கே.சுரேஷ், மயிலாடுதுறை - பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாசை தலைவராக கொண்டு செயல்படும் பா.ம.க. 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக் கான வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் கடந்த 25-ந்தேதி அறிவித்தார். இதையடுத்து 15 தொகுதிகளில் போட்டியிடும் இறுதிகட்ட வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

அதில் தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். பெரம்பூரில் த.வெ.க. தலைவர் விஜய்யை எதிர்த்து திலகபாமாவும், விருத்தாசலத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவை எதிர்த்து டாக்டர் தமிழரசியும், காட்டுமன்னார் கோவிலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அன்புசோழனும் களம் காண்கின்றனர்.

இந்நிலையில், பாமக (ராமதாஸ் தரப்பு) 10 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. தர்மபுரியில் சவுமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் என்பவர் போட்டியிடுகிறார்.

அதன்விவரம் பின்வருமாறு:-

திருப்போரூர் - என்.எஸ்.ஏகாம்பரம்

உத்திரமேரூர் - சு.ஸ்ரீதர்

கும்மிடிப்பூண்டி - எஸ்.டி.கே.சங்கர்

திருவள்ளூர் - நா.வெங்கடேசன்

செஞ்சி - கனல்

தர்மபுரி - அ.சரவணன்

ஜெயங்கொண்டம் - காடுவெட்டி ரவி

செய்யாறு - தி.கா.சீனிவாசன்

அந்தியூர் - எஸ்.சி.ஆர்.கோபால்

புவனகிரி - எம்.ஆர்.பாலமுருகன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com