20ம் தேதி தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
20ம் தேதி தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...!
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப்பணிகள், காங்கிரஸ் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டெ, நிவேதித் ஆல்வா உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com