குடும்ப ஆட்சிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல் இது: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் போல திட்டங்களை தருகிறார் பிரதமர் மோடி என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
குடும்ப ஆட்சிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல் இது: நயினார் நாகேந்திரன்
Published on

திருச்சி,

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடும்ப ஆட்சிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல் இது. தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் போல திட்டங்களை தருகிறார் பிரதமர் மோடி. எங்கு சென்றாலும் தமிழின் பெருமைகளை பேசி வருகிறார் மோடி. எந்த நாடுகளுக்கு சென்றாலும் தமிழ், கலாசாரம், தமிழ் மொழி பற்றி பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தார் என்று எனக் கேட்கிறார்கள்.

14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து வேகமாக வீசணும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். நீங்கள் வீசுவதற்கு களத்தில் விக்கெட்டே இருக்காது. நேற்று இன்று நாளை படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவார்.மக்கள் நலம், மக்கள் நலம் என்று சொல்வார்; தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார். அவருடைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

டிடிவி தினகரன்:

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குஜராத்திலும் திராவிடர்கள் ஆட்சி நடந்துள்ளது. குஜராத்தின் துவாரகாவில் திராவிடர்கள் ஆட்சி செய்துள்ளனர். திராவிடர்கள் ஆட்சி செய்த குஜராத்தில் இருந்து வந்திருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு போன்றது. தமிழ்நாட்டிற்கு டெல்லிக்குமான தேர்தல் இது என்று முதல் அமைச்சர் கூறுகிறார். அவருக்கு இந்த ஒரு விளக்கத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் மோடி டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்ய முடியும். சென்னையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது. இது முதல்வருக்கு தெரியாதா? அல்லது பயத்தில் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

அன்புமணி ராமதாஸ்:

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக உயர்த்தி கொண்டு இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்தியாவில் மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல் அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் அதிமுகதான் தலைமை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com