கூட்டணி தர்மத்தை மதித்து பல தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம்: பிரேமலதா

எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என்று பிரேமலதா கூறினார்.
கூட்டணி தர்மத்தை மதித்து பல தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம்: பிரேமலதா
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டமானது, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நேற்று நடைபெற்றது.

பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடுவதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் பார்த்தசாரதி மற்றும் நல்லதம்பிக்கு இந்த முறை சீட் கிடைக்கவில்லை. இதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பலருக்கும் கிடைக்கவில்லை. உறுதியாக அடுத்த முறை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நாங்கள் தி.மு.க.விடம் முதலில் கொடுத்த உத்தேச பட்டியலில், எங்கள் கட்சியின் 9 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை கேட் டோம். அதில் 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 6 பேருக்கு கிடைக்கவில்லை. வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம்.

நாங்கள் கேட்டதில் பல தொகுதி கிடைத்துள்ளது. பல தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி தர்மத்தை மதித்து நாங்களும் பல தொகுதிகளை விட்டுக்கொடுத்து இந்த கூட்டணியை இறுதிசெய்திருக்கிறோம். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com