மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் -அண்ணாமலை புகழஞ்சலி

காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி உள்ளிட்ட திருத்தலங்களின் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாவீரர்கள் மருது சகோதரர்கள்.
மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் -அண்ணாமலை புகழஞ்சலி
மருதுபாண்டி சகோதரர்கள்
Published on: 

சென்னை,

மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ‘வீ தி லீடர்ட்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தேச விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி, வீரத்துடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.

வீரமும் விவேகமும்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம், அவர்களின் வீரத்திற்கும் விடுதலை வேட்கைக்கும் சான்றாகத் திகழ்கிறது. சிவகங்கைச் சீமையை மீட்டு, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தியதில் அவர்களின் பங்கு மகத்தானது.

ஆன்மீகப் பணி

காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி உள்ளிட்ட திருத்தலங்களின் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com