மாற்றுத்திறனாளி வாலிபரின் காலை பிடித்து வரவேற்ற கேரள முதல்-மந்திரி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுத்திறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து, குலுக்கி வரவேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயனின் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். கைகள் இல்லாத மாற்றுத் திறனாளி வாலிபர். அவர் முதல்-மந்திரியின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்த அவர், தனக்கு ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த ஒரு தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்கினார்.

அப்போது பிரணவ் காலை பிடித்து பினராயி விஜயன் குலுக்கி வரவேற்று அவருடன் கலந்துரையாடினார். பிரணவ் தன் கால் விரல் உதவியுடன் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில், பிரணவுடனான சந்திப்பை நெகிழ்ச்சி மிகுந்த தருணம் என பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

பினராயி விஜயனுடன் பிரணவ் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வாலிபரை பாராட்டி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கால்களை பயன்படுத்தி பிரணவ் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com