சிங்கம்புணரி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது

சுயேச்சையாக வெற்றி பெற்றவரின் ஆதரவு கிடைத்ததால் சிங்கம்புணரி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிக்குட்பட்ட 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 4 இடங்களையும், கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு இடத்தையும், தி.மு.க. 3 இடங்களையும், இதன் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஒரு இடத்தையும் பெற்றது. மேலும் சுயேச்சை வேட்பாளர் சரண்யா ஸ்டாலின் ஒரு இடத்தை பெற்றார். இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் 5 ஒன்றிய கவுன்சிலர்களை கொண்டுள்ளனர். ஆனால் யூனியன் தலைவர் பதவிக்கு 6 கவுன்சிலர்கள் தேவை.

இந்த நிலையில் 2-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் சரண்யா ஸ்டாலின், தன்னை அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இதனால் அ.தி.மு.க.விற்கு மேலும் ஒரு கவுன்சிலர் ஆதரவு கிடைத்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. 6 கவுன்சிலர்களை பெற்று சிங்கம்புணரி யூனியன் தலைவர் பதவியை மீண்டும் தன் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com