கேதார்நாத் கோவில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

கேதார்நாத் கோவில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங்கை வலியுறுத்தினார்.
Published on

டேராடூன்,

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிலை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இணைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போதைய சூழல் மற்றும் புனித தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ள நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்ய தற்போதைய கட்டுமானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.

பணிகளை மேற்கொள்ளும் போது, சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com