பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும் - கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் மனு

விலைவாசிக்கு ஏற்ப கூலிஉயர்வு பெற்றுத்தர வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும் - கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் மனு
Published on

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிசாமி தலைமை யில் பூபதி, வேலுச்சாமி உள்பட நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்த னர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேல் விசைத்தறிகள் உள்ளன. அதில் 95 சதவீதம் விசைத்தறிகளை கூலியின் அடிப்படையில் இயக்கி வருகிறோம். விசைத்தறி தொழிலுக்கு கூலி உயர்வு பெற்று 6 ஆண்டுகள் ஆகிறது. மின்கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள் 50 சதவீதம் மேல் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

நாங்கள் கடந்த 21.10.19 அன்று மனு அளித்ததன் பேரில் பேச்சுவார்த் தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதேநிலை நீடித்தால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை. எனவே கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலைவாசிக்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளர் குடியிருப் போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை மாநகராட்சியில் துப்புரவு பணி செய்யும் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இங்கு மாகாளியம்மன் கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம். தற்போது இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சிலர் இந்த கோவிலை இடித்து அகற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கட்டும் பணியை தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளை யம் தாலுகாவில் காரமடை, சாஸ்திரி நகர், கண்ணர்பாளையம், புஜங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் 800 பேருக்கு பஞ்சமி நிலங்களை மீட்டு இலவச வீட்டுமனை பட்டா தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை மதுக்கரை, கணுவாயை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட் டால் 1000 விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கும். எனவே விவசாயிகள் பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com