அறுந்து விழும் நிலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி


அறுந்து விழும் நிலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி
x

பாகூர் அருகே அறுந்து விழும் நிலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியை பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் சரிசெய்தனர்.

பாகூர்

நெய்வேலியில் இருந்து உயர் மின் அழுத்த மின்கம்பிகள் (டவர் லைன்) மூலம் முள்ளோடை துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து காட்டுக்குப்பம், வில்லியனூர் துணை மின் நிலையங்களுக்கு உயர்மின் கம்பிகள் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் புறவழிச்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியாக பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக செல்லும் உயர கோபுர மின் அழுத்த மின்கம்பி (டவர் லைன்) தீப்பற்றி எரிந்தது. மேலும் அறுந்து விழும் நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மின்துறை ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அறுந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பியை ராட்சத கிரேன் உதவியுடன் ஊழியர்கள் தொங்கியபடி பல மணி நேரம் போராடி சரி செய்தனர். உரிய நேரத்தில் அறுந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பியை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story