ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி


ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி
x

புதுவை அருகே ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் வரை ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடந்தது. விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story