விபசாரத்துக்கு அழைத்த பெண் கைது

புதுச்சேரியில் வீதியில் நின்றுகொண்டு ஆண்களை விபசாரத்துக்கு அழைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விபசாரத்துக்கு அழைத்த பெண் கைது
Published on

புதுச்சேரி

ரெட்டியார்பாளையம் திருநகர் சந்திப்பில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற ஆண்களை விபசாரத்திற்கு அழைப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அப்பெண்கள் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் போலீசிலிடம் சிக்கினார். மற்றொரு பெண் தப்பி ஓடிவிட்டார். கைதான பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர், காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்த மதி (வயது 50) என்பது தெரியவந்தது. தப்பிஓடிய பெண், கண்டமங்கலத்தை சேர்ந்த சுபா என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com