புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

புஷ்பவனம் திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் திரவுபதையம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்தகோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மன் பரிவார தேவதையுடன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com