ராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்

ராகுல் காந்தியை நாய்க்குட்டி என்று கூறிய குஜராத் மந்திரிக்கு அம்மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்தார்.
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கணபத்சிங் வசவா டேடியாபடா என்ற மலைவாழ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தி நாற்காலியில் இருந்து எழுந்திருப்பது, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போகும்போது அவர்கள் வீசும் ரொட்டி துண்டுக்கு ஒரு நாய்க்குட்டி (பப்பி) எழுந்து வாலை ஆட்டுவதுபோல உள்ளது என்றார்.

இந்த பேச்சுக்கு காங்கிரசார் மட்டுமின்றி மாநில முதல்-மந்திரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் கூறும்போது, இதுதான் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறை. ஆனால் குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாகவே முடிவு எடுப்பார்கள் என்றார். முதல்-மந்திரி விஜய்ருபனி, தேர்தலில் ஒருவர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உறுதியான வார்த்தைகளை பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசக்கூடாது என்றார்.

இந்த கணபத்சிங் வசவா தான் முன்பு ராகுல் காந்தி சிவனின் அவதாரம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதற்கு, அதனை நிரூபிக்க விஷம் குடிப்பாரா? என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com